Home இந்தியா தங்கத்தின் விலை தொடர் சரிவு: சவரன் ரூ 18,904க்கு விற்பனை!

தங்கத்தின் விலை தொடர் சரிவு: சவரன் ரூ 18,904க்கு விற்பனை!

742
0
SHARE
Ad

goldசென்னை, ஜூலை 22- தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 19 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்கியுள்ளது.

சர்வதேசப் பண்டகச் சந்தை அடிப்படையில் 24 காரட் தங்கம் 5 ஆண்டுகளில் இல்லாத விலை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சென்னையில் காலை நிலவரப்படி 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 24 ரூபாய் விலை சரிந்து  2 ஆயிரத்து 527 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 22 ரூபாய் வீழ்ச்சி கண்டு 2 ஆயிரத்து 363 ரூபாய்க்கும் ஒரு சவரன் 176 ரூபாய் குறைந்து 18,904 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 36 ரூபாய் 20 காசாகவும், ஒரு கிலோ 240 ரூபாய் சரிவு கண்டு 33 ஆயிரத்து 790 ஆகவும் இருக்கிறது.