Home உலகம் தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டரைத் தாக்கிய ராஜபக்சே!

தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டரைத் தாக்கிய ராஜபக்சே!

499
0
SHARE
Ad

rajaகொழும்பு,ஜூலை 22- தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே, தொண்டர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கும் காணொளி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில்  மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்  கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜபக்சே சென்றார்.

அப்போது தொண்டர் ஒருவர் ராஜபக்சே மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ராஜபக்சே தொண்டர் என்று கூட பார்க்காமல் அவரைச் சரமாரியாகத் தாக்கினார்.

#TamilSchoolmychoice

பின்னர் அங்கு வந்த பாதுகாவலர்களும் கட்சிக்காரர்களும் அவரைச் சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் எதுவும் நடக்காதது போல் தொண்டர்களைப் பார்த்து ராஜபக்சே கையை அசைத்தார்.