Home இந்தியா பிரதமர் மோடியைச் சந்தித்தார் வைகோ!

பிரதமர் மோடியைச் சந்தித்தார் வைகோ!

444
0
SHARE
Ad

1399625284-5422புதுடில்லி, ஜூலை 22- பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

விவசாயிகளுக்கு எதிரான நிலச் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், ஆந்திராவில் செம்மரம் வெட்டியது தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வைகோ தெரிவித்தார்.