Home கலை உலகம் பென்ஜி இயக்கத்தில் ‘ஆவி குமார்’ – சென்னையில் நாளை 150 திரையரங்குகளில் வெளியாகிறது!

பென்ஜி இயக்கத்தில் ‘ஆவி குமார்’ – சென்னையில் நாளை 150 திரையரங்குகளில் வெளியாகிறது!

788
0
SHARE
Ad

Bengகோலாலம்பூர், ஜூலை 23 – நடிகர், இயக்குநர், அறிவிப்பாளர், என பண்முகத் திறமைகளைக் கொண்ட மலேசியக் கலைஞர் காந்தீபன் (பென்ஜி) (படம்), தற்போது ‘ஆவி குமார்’ என்ற படத்தை இயக்கியுள்ளதன் மூலம் உலக அரங்கில் கால் பதிக்கின்றார்.

இந்தியா, மலேசியா கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இப்படம், நாளை வெள்ளிக்கிழமை 24-ம் தேதி, தமிழகம் முழுவதும் சுமார்  150 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை என்.ஸ்ரீதரும், சிவசரவணனும் ‘ஆக்சன் டேக் மூவிஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர்.

‘ஆவி குமார்’ – படத்தின் கதாநாயகன் ஆவிகளுடன் பேசுவது போன்ற கதையம்சம் கொண்ட இப்படம் நகைச்சுவையும், திகிலும் கலந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

படத்தில் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இப்படத்தில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனியும், ஸ்ரீகாந்த் தேவாவும் முதல் முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Aavi-Kumar-Movie-Launch-Poster (1)இயக்குநர் விஜயின் அண்ணன், உதயா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், இந்தி நடிகை கனிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அண்மையக் காலமாக, மலேசியா – இந்தியா கூட்டு முயற்சியில், பல  படங்கள் உருவாக்கப்பட்டு அனைத்துலக அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அப்படங்களில் நமது மலேசியக் கலைஞர்கள் நடிகர்களாக, இசையமைப்பாளர்களாக, இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

அதற்கு உதாரணமாக, அண்மையில் வெளியான படங்களான நீ நான் நிழல், முத்துக்குமார் வாண்டட் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். ‘நீ நான் நிழல்’ படத்தில் சரத்குமாருக்கு இணையாக மலேசிய நடிகர் ஹரிதாஸ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘முத்துக்குமார் வாண்டட்’ படத்திற்காக மலேசிய இசையமைப்பாளர் சுந்தரா அனைத்து பாடல்களையும் உருவாக்கியிருந்தார்.

அந்த வரிசையில், ‘ஆவி குமார்’ மலேசியக் கலைஞர் பென்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் பென்ஜி..

– ஃபீனிக்ஸ்தாசன்