Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளான போது நான் கதறி அழுதேன்  – டோனி பெர்னாண்டஸ்!

ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளான போது நான் கதறி அழுதேன்  – டோனி பெர்னாண்டஸ்!

604
0
SHARE
Ad

??????????????????சிங்கப்பூர், ஜூலை 23 – “ஏர் ஆசியா விமானம் QZ8501, விபத்துக்குள்ளான தகவல் கேட்டு நான் தனிமையில் கதறி அழுதேன். எனினும், எனது அழுகை குழுவினரை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக வெளியில் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன்”  என்று ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், 938லைவ் தொலைக்காட்சிக்கு டோனி பெர்னாண்டஸ் அளித்துள்ள பேட்டியில், “கடந்த வருடம், ஏர் ஆசியா விமானம் QZ8501, விபத்துக்குள்ளான தகவல் கேட்டு நான் தனிமையில் கதறி அழுதேன். எனினும், எனது அழுகை குழுவினரை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக வெளியில் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன். சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம், காணாமல் போனதாக வந்த செய்தி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது.”

airasia1“குறிப்பிட்ட அந்த பகுதிக்கு உடனடியாக போவதா? வேண்டாமா? என்ற குழப்பம் அந்த சமயத்தில் ஏற்பட்டது. எனினும், எனது இருப்பு அந்த சமயத்தில் எனது குழுவினருக்கு தேவைப்பட்டதால், நான் அங்கு போகவில்லை. ஒரு தலைவராக இந்த சம்பவம் என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இளம் பெண்ணின் சடலத்தை புதைப்பதற்காக எடுத்துச் செல்வதை பார்த்த பொழுது, மறைந்த விமானிகளின் குடும்பத்தினரை சந்தித்த பொழுது என்னால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், என்னை விட அவர்களின் துயரம் அதிகமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி, இந்தோனேசியக் கடலில் ஏர் ஆசியா விமானம் QZ8501 விழுந்து விபத்திற்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.