Home நாடு டோனி புவா மனைவி பெயரில் வெளிநாட்டில் 3 மில்லியன் ரிங்கிட்: டோனி டான் குற்றச்சாட்டு

டோனி புவா மனைவி பெயரில் வெளிநாட்டில் 3 மில்லியன் ரிங்கிட்: டோனி டான் குற்றச்சாட்டு

580
0
SHARE
Ad

tony-pua1-250613கோலாலம்பூர், ஜூலை 23 – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் மனைவி பெயரில் வெளிநாட்டில் 3 மில்லியன் ரிங்கிட் இருப்பதாக ஜசெக முன்னாள் உறுப்பினரான டோனி டான் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இக்குற்றச்சாட்டை எழுப்பிய அவர், எப்போதும் அரசாங்கம் தொடர்பான கணக்கு வழக்குகள் பற்றி கேட்கும் டோனி புவா, தனது சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

டோனி புவாவுக்கு ஒரு வார கால அவகாசம் அளிப்பதாக குறிப்பிட்ட டோனி டான், அதற்குள் தனது இக்குற்றச்சாட்டு தொடர்பாக அவர் பதிலளிக்காவிட்டால், தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடப் போவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“டோனி புவாவின் மனைவிக்கு வெளிநாடுகளில் நிறைய சொத்துக்கள் இருப்பது தொடர்பாக 3 ஜசெக உறுப்பினர்கள் கூறிய தகவல்கள் என்னிடம் உள்ளன. உரிய ஆதாரங்கள் அனைத்தும் ஜசெக உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளது. அரசாங்க கணக்கு வழக்குகளின் வெளிப்படைத்தன்மை குறித்து எப்போதும் கேள்வி எழுப்பும் டோனி புவா, தனது சொத்துக்கள் குறித்தும் அறிவிக்க வேண்டும்,” என்றார் டோனி டான்.

ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் தனி உதவியாளராக இருந்து வந்த இவர், கடந்த 2007-ல் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில், ஜசெகவை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையே, டோனி டானின் குற்றச்சாட்டு குறித்து டோனி புவாவிடம் கேட்டபோது, தன்னிடம் உள்ள ஆதாரங்களை டோனி டான் உடனடியாக வெளியிடலாம் என்றார்.

“எனக்கு கால அவகாசம் எல்லாம் தேவை இல்லை. அவரிடம் ஆதாரங்கள் ஏதும் இருப்பின், அவற்றை உடனடியாக வெளியிடலாம். எனது மனைவிக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் மீது டோனி டான் குற்றம்சாட்டியது வருத்தம் அளிக்கிறது,” என்றார் டோனி புவா.