Home One Line P1 ஜசெக: ரோனி லியுவின் நிலைப்பாடு கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை!

ஜசெக: ரோனி லியுவின் நிலைப்பாடு கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை!

591
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரோனி லியுவின் கூற்றினை விமர்சித்துள்ளனர். கட்சி மலாய்க்காரர்களின் ஆதர்வைப் பெறுவதற்காக அதன் சீன அடையாளத்தை இழந்து விடவேண்டாம் என்று அவர் கூறியிருந்தார்.

ஜசெக பேரினவாத கட்சியாக இருக்கத் தேவையில்லை என்று டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா விமர்சித்தார்.

“பல தசாப்தங்களாக, நாங்கள் ஒரு சீன பேரினவாதக் கட்சி என்று நியாயமற்ற மதிப்பீட்டைக் கொண்டுள்ளோம். இது சிறுபான்மையினர் உரிமைகள் தேசிய முன்னணி அரசாங்கத்தால் மிதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான கட்சியின் முயற்சிகளின் நேரடி விளைவாக இந்த முத்திரை குத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக, சீன சமூகம் தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி எழுப்புவதால், கட்சி ஒரு சீன பேரினவாத கட்சி என்று முத்திரை குத்தப்படுகிறது, ” என்று புவா இன்று காலை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

லியுவின் அறிக்கை ஜசெகவின் கொள்கைக்கு ஏற்றதல்ல என்று புவா தெரிவித்தார்.

“இது ஒரு பேரினவாத இயல்பு மற்றும் ஜசெகவுக்கு பேரினவாதிகள் தேவையில்லை. கட்சித் தலைமை அத்தகைய பேரினவாத கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்பதையும் நான் விரும்புகிறேன், “என்று புவா கூறினார்.

செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ தனது முகநூல் பதிவில், லியு ஜசெக உறுப்பினராக தனது கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறினார்.

“ரோனி லியு என்னை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ரோனி விரும்பும் ஜசெக, நான் சேர்ந்த ஜசெக இல்லை. அவரது பேச்சுடன் நான் உடன்படவில்லை. கட்சியின் கலாச்சாரம் என்ன? இது குறுகிய மற்றும் நச்சு சிந்தனை அல்லவா?”, என்று அவர் கூறினார்.