Home One Line P1 வழக்கு எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் இடைநீக்கம் செய்யக்கூடாது?

வழக்கு எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் இடைநீக்கம் செய்யக்கூடாது?

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் ஓர் அரசு ஊழியரை இடைநீக்கம் செய்ய முடிகிறதென்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இது அமல்படுத்தப்படவில்லை என்று மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்தீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம், மத்திய அரசியலமைப்பின் பிரிவு 8-இன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எனவே, நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையை விதிக்க இது போன்ற வழிமுறைகளை பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

#TamilSchoolmychoice

“இப்போது ஓர் அரசு ஊழியர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்போது, ​​அவரது சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுகிறது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்கள் ஜாமீன் உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், அரசு ஊழியர்கள் இடையில் இது இல்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் மற்றும் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோர் ஊழல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

தெங்கு அட்னான் இன்னும் மேல்முறையீட்டிற்காக காத்திருக்கையில், எஸ்ஆர்சி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கான மேல்முறையீடு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நஜிப்பின் விசாரணை நடந்து வருகிறது.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, அப்துல் அசிஸ் அப்துல் ரகிம், அகமட் மஸ்லான் உட்பட பலர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.