Home நாடு முன்னாள் 1எம்டிபி அதிகாரி உட்பட நால்வர் வெளிநாடு செல்லத் தடை!

முன்னாள் 1எம்டிபி அதிகாரி உட்பட நால்வர் வெளிநாடு செல்லத் தடை!

525
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர், ஜூலை 23 – 1எம்டிபி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர், வெளிநாடு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது.

குடிநுழைவு இலாகாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில், எஸ்ஆர்சி அனைத்துலக செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் 1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான நிக் ஃபைசல் ஆரிஃப் காமில் (வயது 44) பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, அந்தப் பட்டியலில் தற்போது ‘த எட்ஜ்’ நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ தோங் கூய் ஆங், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice