Home நாடு பிரிட்டன் ஆஷ்லே மாளிகையை விற்பனை செய்ய மாரா முடிவு!

பிரிட்டன் ஆஷ்லே மாளிகையை விற்பனை செய்ய மாரா முடிவு!

612
0
SHARE
Ad

ANNUAR_MUSAகோலாலம்பூர், ஜூலை 23 – பிரட்டனில் இருக்கும் மாராவிற்கு சொந்தமான ஆஷ்லே மாளிகை விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், மாரா குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மெல்பெர்ன் சொத்துக்களுக்கான கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை மாரா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவும்(படம்) உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக மூசா கூறுகையில், “அபுதாபி வங்கி மற்றும் ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்பாக் வங்கியில், மெல்பெர்ன் சொத்துக்களுக்காக வாங்கிய 70 சதவீதம் கடனை, மாரா திரும்பிச் செலுத்த வேண்டும். அதற்காக மாரா, சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சிறந்த வாய்ப்புகள் அமைந்தால் வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களும் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாராவால் வாங்கப்பட்ட லண்டன் ஆஷ்லே மாளிகையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இனி மாரா, வெளிநாடுகளில் எந்தவொரு முதலீடுகளையும் ஏற்படுத்தாது” என்றும் கூறியுள்ளார்.