கோலாலம்பூர் – முன்னாள் மாரா நிறுவனத் தலைவரும், கிளந்தான் மாநிலத்தின் கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.
மாரா நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை அனுவார் மூசாவை தலைவர் பொறுப்பிலிருந்தும் மாரா முதலீட்டுக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலக்கி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
பண முறைகேடுகள், அதிகார வரம்பு மீறல் ஆகியவை தொடர்பில் அனுவார் மூசா மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும், கிளந்தான் காற்பந்து குழுவுக்கு வழங்கப்பட்ட விளம்பர ஆதரவுகள் தொடர்பிலான முறைகேடுகள் மீதுதான் விசாரணைகள்தான் நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.