Home நாடு வெளிநாடு செல்ல திடீர் தடை: வழக்குத் தொடுக்க டோனி புவா முடிவு!

வெளிநாடு செல்ல திடீர் தடை: வழக்குத் தொடுக்க டோனி புவா முடிவு!

746
0
SHARE
Ad

Tony Pua DAPகோலாலம்பூர், ஜூலை 23 – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வெளிநாடு செல்ல அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளது. இதனால் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க டோனி புவா முடிவு செய்துள்ளார்.

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட அவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடுத்து நிறுத்தப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான டோனி புவா, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

எனினும் அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய குடிநுழைவு அதிகாரிகள், மேலிட உத்தரவின் பேரில் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட முடியாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டதற்கு டோனி புவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இதன் மூலம் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது. தடைப்பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை,” என்றார் டோனி புவா.