Home நாடு மாரா முறைகேடு உறுதி செய்யும் நௌவ் குழுவின் அறிக்கை!

மாரா முறைகேடு உறுதி செய்யும் நௌவ் குழுவின் அறிக்கை!

834
0
SHARE
Ad

akmal nasirகோலாலம்பூர், ஜூலை 1 – மாரா பல்கலைக்கழக அதிகாரிகள் மெல்போர்னில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக நௌவ் குழு அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

தேசிய அளவில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் தன்னார்வ அமைப்பான ‘நேஷனல் ஓவர்சைட் அண்ட் விசில்ப்ளோயர் மையம்’ (National Oversight & Whistle blowers Centre) மாரா அதிகாரிகள் மெல்போர்ன் சொத்து வாங்கிய ஒப்பந்தத்தில், நடைமுறையை விட கூடுதலான தொகையைக் கொடுத்து அரசிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.

மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 115 மலேசிய மாணவர்களுக்காக மாரா, மெல்பெர்னில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் வாங்கியது. இதில் பல மில்லியன் ரிங்கிட் மோசடி நடந்துள்ளதாக ‘தி ஏஜ்’ (பத்திரிக்கை) குற்றம்சாட்டியது.

#TamilSchoolmychoice

மேலும், இந்த மோசடியில் மாராவின் முக்கிய அதிகாரிகள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் உண்மையான விலையை விட சில மில்லியன் ரிங்கிட் அதிகமாக அரசிற்குக் கணக்குக் காட்டியதாகவும் தெரிவித்திருந்தது. இதனை மாரா தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது ‘நௌவ்’ (NOW) அமைப்பும் தி ஏஜின் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக நௌவ்வின் நிர்வாக இயக்குனர் அக்மல் நசிர் கூறுகையில், “மாரா நிர்வாகம், 51 ‘குயின் தெருவில்’ (Queen Street) வாங்கிய மூன்றாவது கட்டிடத்தில் 18 மில்லியன் ரிங்கிட், நடைமுறையை விட அதிகமாகச் செலுத்தி உள்ளது. அதேபோல், 333 எக்ஸிபிஷன் தெருவில், 89 மில்லியன் ரிங்கிட் செலுத்தி உள்ளது. ஆனால் அந்த சொத்தின் தற்போதைய உண்மையான விலை சுமார் 63 மில்லியன் ரிங்கிட் தான்.”

“மாரா எதற்காக இந்த அளவிற்கு வித்தியாசமான தொகையைச் செலுத்தியது என்று தெரியவில்லை. மேலும், மாராவிற்கு அந்தச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முன்பு, ‘குவின்ட்டெஷென்ஷியல் குழுமம்’ (Quintessential Group) எதற்காகப் பெயர் குறிப்பிடப்படாத நிறுவனத்திடம் அந்தச் சொத்துக்களை விற்பனை செய்தது என்பதும் தெரியவில்லை. மூன்று மாத இடைவெளிகளில் மிகப் பெரிய அளவில் வித்தியாசப்படும் சொத்துக்களை மாரா வாங்கி உள்ளது சந்தேகத்தைக் கிளப்புகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மாரா இதற்கான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மக்களிடம் இதனைத் தெரிவிப்பது அவரின் முக்கியக் கடமை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.