இது குறித்து விளக்கமளித்துள்ள அகமட் மஸ்லான், ” தொடர்ச்சியாக மூன்று பொய்யான பதிவுகள் எனது பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ளன. அதைச் சில விஷமிகள் தான் செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. என்னுடைய பதவியைக் கூட அவர்கள் தவறாக எழுதியுள்ளார்கள். நான் இரண்டாவது நிதியமைச்சர் கிடையாது. நான் முதல் நிதியமைச்சர். பி1ஆர்எம் ( B1RM) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அது பிஆர்1எம்( BR1M). அதே நேரத்தில், கேஎப்சி குறித்து நான் ஜூன் 1-ல் பதிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் கருத்தும் பொய்யானது.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.