Home நாடு அகமட் மஸ்லான், நஜிப்பிடம் 2 மில்லியன் பெற்றதற்காக குற்றச்சாட்டுகள்

அகமட் மஸ்லான், நஜிப்பிடம் 2 மில்லியன் பெற்றதற்காக குற்றச்சாட்டுகள்

983
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவின் தலைமைச் செயலாளரும் ஜோகூர், பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் மஸ்லான் (படம்), முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

நஜிப்பிடம் இருந்து பெற்ற அந்த 2 மில்லியன் ரிங்கிட் குறித்து உள்நாட்டு வருமான வரி இலாகாவிடம் அகமட் மஸ்லான் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அந்தத் தொகை குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்திடம் பொய்யான தகவல்கள் தெரிவித்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சட்டத்துக்குப் புறம்பான முறையில் இந்தப் பணம் பெறப்பட்டது என்றும் அகமட் மஸ்லான் மீதான குற்றப் பத்திரிகை தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அகமட் மஸ்லான் விசாரணை கோரியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இதே வழக்குக்காக அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) அகமட் மஸ்லான் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கு நேற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

55 வயதான அகமட் மஸ்லானுக்கு பிணைத் தொகையாக 500,000 ரிங்கிட்டை நீதிமன்றம் நிர்ணயித்தது.

வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி மீண்டும் தொடரும்.