Home உலகம் கழுகின் மீது இலவசச் சவாரி – காகம் செய்த சாகசம்!

கழுகின் மீது இலவசச் சவாரி – காகம் செய்த சாகசம்!

839
0
SHARE
Ad

crow1வாஷிங்டன், ஜூலை 1 – வானுயரப் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது காகம் ஒன்று சவாரி செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் தற்போது வெகு வேகமாகப் பரவி வருகிறது.

2A1A034900000578-0-image-a-1_1435648522998அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான பூ சான் (50) சமீபத்தில் வாஷிங்டன் கடற்கரையில் வான்வெளியை இரசித்துக் கொண்டிருந்தார். அப்போது வானில் வட்டமடித்து வந்த பெரிய கழுகின் மீது சிறிய காகம் ஒன்று சவாரி செய்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதனை அப்படியே தனது ஒளிப்படக்கருவியில் தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்து சான், இணைய தளங்களில் அதனை வெளியிட்டார். தற்போது அவரின் இந்தப் புகைப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

2A1A03D700000578-0-image-a-7_1435648562731இந்தப் புகைப்படம் குறித்துச் சான் கூறுகையில், “ஒரு இரை தேடிக்கொண்டிருக்கும் கழுகைப் படம் பிடிக்க ஒளிப்படக்கருவிக் கண்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் பார்த்துக் கொண்டிருந்த கழுகின் அருகே காகம் ஒன்று பின்புறம் பறந்து வந்தது. முதலில் நான் அது, கழுகிற்குப் பயந்து முந்திக் கொண்டு பறந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத தருணத்தில் ஆச்சரியப்படும் சம்பவம் நடந்தது.”

2A1A034900000578-0-image-a-1_1435648522998“அந்தக் காகம் தரையில் இறங்குவது போல கழுகின் மேல் பகுதியில் போய் இறங்கியது. ஒரு சில வினாடிகள் அந்தக் காகம், கழுகின் மீது இலவசச் சவாரி செய்தது. எதிர்பாரமல் நடந்த இந்த காகத்தின் செயல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், கழுகிடம் எந்த மாற்றமும் இல்லை.”

2A1A03D700000578-0-image-a-7_1435648562731சில நொடிகளில் இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து சென்று விட்டன” என்று அவர் கூறியுள்ளார்.