Home கலை உலகம் பவர் ஸ்டார் நடிப்பில், லிங்கா பிரச்சினை சினிமாவாகிறது!

பவர் ஸ்டார் நடிப்பில், லிங்கா பிரச்சினை சினிமாவாகிறது!

664
0
SHARE
Ad

powerstar-srinivasanசென்னை, ஜூலை 1- ரஜினிகாந்தின் லிங்கா படத்தால் நட்டமடைந்ததாகக் கூறி விநியோகஸ்தர்கள், நட்டஈடு கேட்டுப் போராடி , கணிசமான தொகையையும் நட்ட ஈடாக ரஜினியிடமிருந்து பெற்றார்கள். அதுவும் போதாதென்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே!

தற்போது அந்தப் பிரச்சினையை வைத்துத் தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் புதிய படம் ஒன்றைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளனர். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கவிருக்கிறார்.

இதற்கு முன் ஷங்கரின் ஐ படத்தில், எந்திரன் ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் நடித்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்தைக் கிண்டல் செய்வது மாதிரி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா? “நானும் ஹீரோதான்.”

இது எப்படி இருக்கு?

லிங்கா படம், அதன் வெளியீடு, அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சினைகள் போன்றவற்றை  வைத்து இந்தப் படத்தை எடுத்து வெளியிட இருப்பது, லிங்கா பட விநியோகஸ்தர் சிங்காரவேலன் தான்!

இது குறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் கூறியதாவது:

“இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும். பவர்ஸ்டார் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் நட்டமடைகிறது. பவர்ஸ்டார் அதனை எப்படிச் சரி செய்து பிரச்சினையில் இருந்து வெளிவருகிறார் என்பது தான் கதை.

படத்தை எடுத்து முடித்தவுடன் ரஜினிக்கும் போட்டுக் காட்ட உள்ளோம். ரஜினியே பார்த்தாலும் சிரித்துவிடும்படி தான் கதையை அமைத்திருக்கிறோம். மேலும் இது ரஜினியை எந்த விதத்திலும் அவமதிப்பது போல இருக்காது” என்கிறார்.