Home Featured கலையுலகம் ரஜினி உள்பட லிங்கா படக்குழுவினர் இன்று நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் மனு!

ரஜினி உள்பட லிங்கா படக்குழுவினர் இன்று நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் மனு!

703
0
SHARE
Ad

Photo Captionமதுரை – மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் தனது கதையை திருடி லிங்கா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது ‘முல்லைவனம் 999‘ படத்தின் கதையை திருடி, லிங்கா படத்தை தயாரித்துள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமா கதாசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி லிங்கா படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க கெடு விதித்து உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

அதன்பேரில் கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (8-ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ், கே.எஸ்.ரவிக்குமார், பொன்குமார் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் மனு அனுப்பி உள்ளது.

அதில், இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், மதுரை நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்கூட்டியே (மார்ச் 8-ந்தேதி) விசாரணைக்கு பட்டியலிடுகிறது. ஆகையால் இன்று நடக்கும் விசாரணையில் மனுதாரர் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.