Home கலை உலகம் லிங்கா படத்தின் நட்ட ஈடு பிரச்சினை தீர்ந்தது: திருப்பூர் சுப்பிரமணியம் உதவினார்!

லிங்கா படத்தின் நட்ட ஈடு பிரச்சினை தீர்ந்தது: திருப்பூர் சுப்பிரமணியம் உதவினார்!

777
0
SHARE
Ad

linhaaசென்னை- ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்ட ஈடு பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

லிங்கா படத்திற்கு நட்ட ஈடாக ரூ 12.5 கோடியை ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் தர சில மாதங்களுக்கு முன் சம்மதித்திருந்தனர்.

அதில் ரஜினிகாந்த் மட்டும் தனது பங்காக ரூ 6.50 கோடியைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் கொடுத்து உரிய முறையில் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்.

#TamilSchoolmychoice

ராக்லைன் வெங்கடேஷால் தனது பங்கான ரூ 6 கோடியை உடனடியாகத் தர முடியாமல் கால தாமதம் ஏற்பட்டது.அதனால் மீண்டும் பிரச்சினை வெடித்தது.

இந்நிலையில், லிங்கா பிரச்சினைக்குத் தீர்வு காணும் கூட்டம் அண்மையில் கூடியது. இதில் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, வேந்தர் மூவீஸ் எஸ் மதன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், பிலிம்சேம்பர் நிர்வாகி காட்ரகட்ட பிரசாத், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ 4.75 கோடியைக் கொடுத்தார். மீதிப் பணத்தைத் தன்னால் தற்போது தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து மீதிப் பணமான ரூ 1.25 கோடியைத் தானே தர முன்வந்தார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.

“ரஜினியை வைத்துப் பல கோடியைச் சம்பாதித்தவன் நான். இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்து முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க விரும்பவில்லை. ரஜினி சாருக்காக அந்த 1.25 கோடி ரூபாயை நானே தருகிறேன்,” என்று அவர் அறிவித்தபோது, அரங்கிலிருந்த மொத்தப் பேரும் கை தட்டினர்.

திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு ராக்லைன் வெங்கடேஷை நெகிழ வைத்தது. இத்தனைக்கும் லிங்கா படத்தின் விநியோக உரிமையைத் திருப்பூர் சுப்பிரமணியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.