Home தொழில் நுட்பம் புத்தக விற்பனையில் அமேசானுக்கு முதல் இடம்; இரண்டாம் இடத்தில் பிளிப்கார்ட்!

புத்தக விற்பனையில் அமேசானுக்கு முதல் இடம்; இரண்டாம் இடத்தில் பிளிப்கார்ட்!

720
0
SHARE
Ad

புது டெல்லி, ஜூலை 1 – உலக அளவில் புத்தக விற்பனையில், இந்திய இணைய வர்த்தக நிறுவனமான ‘பிளிப்கார்ட்டிற்கு’ (Flipkart) இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க நிறுவனமான அமேசான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

amazon‘புக்ஸ்டோர் மைண்ட் ஷேர்’ (Bookstore Mind Share) கணக்கெடுப்பு அமைப்பு உலக அளவில் இணையம் மூலமாகவும், நேரடியாகவும், அதிக அளவில் புத்தக விற்பனை செய்யும் நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பைச் சமீபத்தில் நடத்தியது.

இதில் அமெரிக்க இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் உலக அளவில் சிறந்த புத்தக விற்பனை நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மற்றொரு நிறுவனமான பிளிப்கார்ட் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள புகழ்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் பிளிப்கார்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்தப் பட்டியலில் அமேசான் முதல் இடம் பிடித்ததை விட பிளிப்கார்ட் இரண்டாம் இடம் பிடித்தது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மிக முக்கியப் புத்தக விற்பனை நிறுவனமான ‘பர்ன்ஸ் அண்ட் நோபல்’ (Barnes & Noble), பிரான்ஸின் ‘எஃப்என்ஏசி’ (FNAC), இங்கிலாந்தின் ‘வாடர்ஸ்டோன்ஸ்’ (Waterstones) போன்ற நிறுவனங்களைத் தாண்டித் தான் இந்த இடத்தை பிளிப்கார்ட் பிடித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே தனது வர்த்தகத்தினைச் செய்து வரும் பிளிப்கார்ட், கடந்த வருடத்தில் மட்டும் 30 மில்லியன் புத்தகங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, அந்நிறுவனம் மீது உலக நிறுவனங்களின் பார்வை விழுந்துள்ளது.