Home Featured தமிழ் நாடு சூறாவளி பிரச்சாரம் செய்வேன்; பாஜகவில் இணைந்த பவர் ஸ்டார் பேட்டி!

சூறாவளி பிரச்சாரம் செய்வேன்; பாஜகவில் இணைந்த பவர் ஸ்டார் பேட்டி!

714
0
SHARE
Ad

powerstar-srinivasan5சென்னை – நகைச்சுவை நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தனது மனைவி மாயாவுடன் நேற்று பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். அங்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார்.

பின்னர் அவர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். தொடர்ந்து சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த நாள், என் வாழ்க்கையின் பொன்நாள்”.

“ஏராளமான கட்சிகள் இருக்கும் போது, பா.ஜனதாவில் இணைந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வரை நான் சூறாவளி பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

#TamilSchoolmychoice