Home உலகம் 153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை – மியான்மர் நீதிமன்றம் அதிரடி!

153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை – மியான்மர் நீதிமன்றம் அதிரடி!

396
0
SHARE
Ad

mynamarநேபிடா, ஜூலை 24 – மியான்மர் நீதிமன்றம், 153 சீனர்களுக்கு, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம், சீன எல்லையை ஒட்டி உள்ள மியான்மர் பகுதியான கச்சின் மாநிலத்தில் 153 சீனர்களை, சட்டவிரோதமாக மரம் வெட்டியதாகக் கூறி மியான்மர் இராணுவத்தினர் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் தான், கைது செய்யப்பட்ட அவர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

மியான்மர் எல்லைப்பகுதியில் கடந்த சில வருடங்களாகவே, சீனர்கள் தொடர்ந்து மரங்களை  கடத்தி வந்தனர். இதனை தடுக்க நினைத்த மியான்மர் அரசு, அந்நாட்டு இராணுவத்தினரை, குறிப்பிட்ட சில எல்லையோர பகுதியில், அவ்வபோது அதிரடி சோதனையில் ஈடுபட வைத்தது.

#TamilSchoolmychoice

அதன் ஒருபகுதியாகத் தான், கடந்த ஜனவரி மாதத்தில் 153 சீனர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் நீதிமன்றத்தில், கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் இருந்து அரசியல் ரீதியிலான கண்டனங்கள் எழத் தொடங்கி உள்ளன.

இது தொடர்பாக பெய்ஜிங்கின் வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மியான்மர் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட ரீதியாக இருக்க வேண்டும். மிகவும் நியாயமான முறையில்  கைதானவர்கள், சீனாவிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக மியான்மர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் நீதிமன்ற நடைமுறைகளில் தலையிடுவதில்லை. ஒருநாட்டின் சட்டங்களை பிற நாட்டினர் மீறுகையில் குறிப்பிட்ட அந்த நாட்டின் நீதிமன்றம் எடுக்கும் சட்டப்பூர்வமான தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இது சீனாவிற்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளது.

மியான்மரில் ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.