Home உலகம் பூமிக்கு அருகிலேயே இன்னொரு பூமி – கெப்லர் மூலம் கண்டுபிடித்தது நாசா!

பூமிக்கு அருகிலேயே இன்னொரு பூமி – கெப்லர் மூலம் கண்டுபிடித்தது நாசா!

602
0
SHARE
Ad

earth2வாஷிங்டன், ஜூலை 24 – பூமியைத் தாண்டி மனிதன் அடுத்து எங்கு வசிக்க முடியும்? அங்கும் மனித இனம் வாழுவதற்கான சூழல் இருக்கின்றதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆராய்ச்சியை, நாசா கடந்த 2009-ம் ஆண்டே துவங்கியது. இந்த ஆராய்ச்சியில் நாசாவின் ஒரே நம்பிக்கை கெப்லர் செயற்கைக்கோள் தான்.

இந்த கெப்லர் செயற்கைக்கோள், சூரியக் குடும்பத்தைத் தாண்டி, பால்வெளியில் வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ முடியுமா? வேற்று கிரகவாசிகள் ஏதும் வாழ்கின்றனரா? என ஆராய்ச்சி செய்து வந்தது. இந்நிலையில், நாசாவின் ஆராய்ச்சியை கெப்லர் வெற்றி பெறச் செய்துள்ளது. ஆம், பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றை கெப்லர் செயற்கைக் கோள் உதவியுடன் நாசா கண்டறிந்துள்ளது. குறிப்பிட்ட அந்த கிரகம், பூமி இருக்கும் அதே நட்சத்திரப் பாதையில் தான் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

எனினும், நாசாவால் அந்த கிரகத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகளான நீர், காற்று போன்றவை இருக்கின்றனவா? என்று உறுதியாகக் கூற முடியவில்லை. தற்சமயம், அந்த கிரகம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாகவும், பூமியில் இருந்து 1,400 ஒளியாண்டு தொலைவில் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. கெப்லர் செயற்கைக்கோள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளதால், அதன் பெயர் கெப்லர்-452பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய கிரகம் தொடர்பாக கெப்லர் ஆராய்ச்சியாளர் ஜான் ஜென்கின்ஸ் கூறுகையில், “பூமியை விட, கெப்லர்-452பி நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது. எனவே, அங்கு வெளிச்சம் பூமியை விட அதிகமாகவே இருக்கும். அதேபோல், பூமிக்கு எந்த அளவிற்கு சூரிய ஒளி கிடைக்கிறதோ அதே அளவில் புதிய கிரகத்திற்கு கிடைக்கும். வளிமண்டலத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், புவி ஈர்ப்பு விசை பூமியை விட இரு மடங்காக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கோளப்பாதையை சுற்றிவர புதிய கிரகத்திற்கு 385 நாட்களாகும். இதுவும் பூமிக்கு இணையாகவே உள்ளது. இவற்றை எல்லாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது, மனிதன் வாழும் சூழல் அங்கு இருப்பதாகவே தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.