Home கலை உலகம் “அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை” – நடிகை த்ரிஷா

“அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை” – நடிகை த்ரிஷா

721
0
SHARE
Ad

TRISHAசென்னை, ஜூலை 23 – முதல்வர் ஜெயலலிதாவின் ரசிகையாக பல சந்தர்ப்பங்களில் தன்னைக் காட்டிக் கொண்டு வந்த நடிகை த்ரிஷா, டுவிட்டர் பக்கத்திலும் அவரிடம் விருது பெரும் புகைப்படத்தை வைத்து கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி வந்தார்.

ராதிகா, குஷ்பு, சிம்ரன் போன்று த்ரிஷாவும் அரசியலில் ஈடுபடுவார் என்று கடந்த சில நாட்களாகவே எதிர்பார்ப்பு  நிலவி வந்தது. ஊடகங்களும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பட வாய்ப்புகளை இழந்து வரும் த்ரிஷா, வெகு சீக்கிரத்தில் அதிமுக-வில் இணைவார் என்று செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில், தன்னைப் பற்றி வெளியான பரபரப்புச் செய்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் த்ரிஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“சமீபத்தில் என்னைப் பற்றி வெளியான செய்திகளுக்கு மாறாக, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் எனக்கு இருக்காது. இதைத் தவிர கூறுவதற்கு வேறொன்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.