Home கலை உலகம் “திருமணம் நின்றது கடவுளின் விருப்பம்” – த்ரிஷா!

“திருமணம் நின்றது கடவுளின் விருப்பம்” – த்ரிஷா!

779
0
SHARE
Ad

trisha1சென்னை, மே 31 – வருண் மணியனுடனான திருமணம் நின்று போனது கடவுளின் விருப்பம் என நடிகை த்ரிஷா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் நடிகை த்ரிஷாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிச்சயதார்த்தம் ஏனோ திருமணம் வரை செல்லவில்லை. நடிகை த்ரிஷா திருமணத்திற்கு தாமதப்படுத்துவதாகவும், தொடர்ந்து நடிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பதால் வருண் மணியன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது பற்றி அதிகம் பேசாமல் இருந்த த்ரிஷா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனது திருமணம் நின்று போனது உண்மைதான். அது எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதில் எனது கையில் ஒன்றும் இல்லை. அனைத்தும் நமது கட்டுப்பாட்டை மீறி நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நடந்து முடிந்தவற்றையே நினைத்துக் கொண்டு இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியாது. தற்போது என் கவனம் எல்லாம் புதிய படங்களில் தான் உள்ளது. வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். நான் கடவுளின் குழந்தை. அவர் என்னைக் காப்பாற்றுவார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.