சென்னை,ஜன.04 – கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வடிவேலு என்ற நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பும் நிலைக்கு காமெடி நடிகர் வடிவேலு தள்ளப்பட்டார்.
வடிவேலுவை மட்டுமே நம்பி படம் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கூட அவரை ஓரம்கட்ட தொடங்கினார்கள். இந்த நிலையில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு தேவன் எடுக்கப் போவதாக கூறினார். ஆனால், தேர்தல் பிரச்சனையால் இந்த முயற்சியும் கைவிடப்பட்டது என கூறப்பட்டது.
இதற்கிடையில், வடிவேலு மீண்டும் தனது திரைப் பயணத்தை தொடங்க இருக்கிறார். ஆம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்திற்கான கதை விவாதத்தை வடிவேலு தனது அலுவலகத்தில் தொடங்கி இருக்கிறாராம். முதல் பாகத்தை காட்டிலும் இதில் காமெடி இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்று கூறி அதற்கேற்ப கதையை உருவாக்கி வருகிறார்களாம்.
தொடக்க காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து இப்படத்திற்கு காமெடி டிராக் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
வந்துன்ட்டாயா… வந்துன்ட்டாயா…வடிவேலு வந்துட்டான்யா…