Home கலை உலகம் ஸ்பெயினுக்கு பறக்க இருக்கும் விஜய் & விஜய் குழுவினர்

ஸ்பெயினுக்கு பறக்க இருக்கும் விஜய் & விஜய் குழுவினர்

1048
0
SHARE
Ad

சென்னை,ஜன.04 –  ‘துப்பாக்கி’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் நாயகியாக அமலா பால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் தொடர்ந்து மும்பையிலேயே நடக்க இருக்கிறது.

ஜனவரி 9ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது. அதன் பிறகு பாடல் காட்சிக்காக விஜய் & விஜய் குழுவினர் ஸ்பெயினுக்கு பறக்க இருக்கிறார்கள்.

இதற்காக இயக்குநர் விஜய் ஸ்பெயின் சென்று படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்து வந்திருக்கிறாராம்.

#TamilSchoolmychoice

இதெல்லாம் சரி, பட தலைப்பை எப்போது தேர்வு செய்ய போகிறீர்கள் விஜய் & விஜய்!