Home இந்தியா பாதயாத்திரை : ராஜசேகர ரெட்டியின் சாதனையை முறியடித்தார் சந்திரபாபு நாயுடு

பாதயாத்திரை : ராஜசேகர ரெட்டியின் சாதனையை முறியடித்தார் சந்திரபாபு நாயுடு

1293
0
SHARE
Ad

நகரி,ஜன.04 –  ஆந்திரா அரசியலில் பாத யாத்திரை என்பது பழகிப் போன ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. பாத யாத்திரை மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்த ராஜசேகர ரெட்டியைப் போலவே சந்திரபாபு நாயுடுவும் கடந்த அக்டோபர் மாதம் பாத யாத்திரை மேற்கொண்டார்.

அனந்தபுரம் மாவட்டம் சிந்துபுரா தொகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கிய அவர் இதுவரை 9 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். 13 நகரம், 643 கிராமங்கள் என 1500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

இதன்மூலம் ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரையை முறியடித்து சாதனை படைத்ததாக அவரது கட்சியினர் பெருமையாக குறிப்பிட்டனர். இதற்காக வழங்கல்லில் ஒரு கல்வெட்டை திறந்து வைத்தனர்.

#TamilSchoolmychoice

ராஜசேகர ரெட்டி 1468 கிலோ மீட்டர் தூரம்தான் பாதயாத்திரை சென்றார். ஆனால் சந்திரபாபு நாயுடு 1500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதுடன் இன்னும் 1 வாரம் யாத்திரையை தொடர திட்டமிட்டு உள்ளார்.