Home Slider அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளாக பதவியேற்ற இந்தியர்கள்

அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளாக பதவியேற்ற இந்தியர்கள்

1032
0
SHARE
Ad

கலிபோர்னியா,ஜன.04 – அமெரிக்கா வாழ் இந்தியர்களான அமி பெரா (படத்தில் உள்ளவர்), துளசி கப்பார்டு ஆகியோர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளாக பதவியேற்றார்கள்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக இரு அமெரிக்க வாழ் இந்தியர்களான கலிபோர்னியோவை சேர்ந்த அமி பெராவும், ஹவாய் தீவை சேர்ந்த இளம் ஈராக் போர் வீரரும் இந்து அமெரிக்கருமான துளசி கப்பார்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று முறைப்படி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அப்போது பெராவின் குடும்பத்தினரும், துளசி சார்பாக அமெரிக்காவில் வாழும் அதிகமான இந்துக்களும் அதில் கலந்துகொண்டனர்.