Home உலகம் பிரசாரத்தில் தொண்டரைத் தாக்கிய விவகாரம்: விரலை முறித்தான்; அடித்தேன் – ராஜபக்சே!

பிரசாரத்தில் தொண்டரைத் தாக்கிய விவகாரம்: விரலை முறித்தான்; அடித்தேன் – ராஜபக்சே!

616
0
SHARE
Ad

rajapakse1கொழும்பு, ஜூலை 24-இலங்கை பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, பொது இடத்தில் வைத்து ஒரு தொண்டரை ராஜபக்சே தாக்கிய காணொளி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது அநாகரிகமான செயல் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பொதுமக்கள் மத்தியில், ஒரு பெரும் அரசியல் தலைவர் கட்டுப்பாட்டை இழந்து இப்படி நடந்து கொண்டது சரியல்ல என்று பொதுமக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஏற்கனவே, மக்களிடையே ஆதரவு குறைந்து வரும் சமயத்தில் ராஜபக்சேவின் இத்தகைய செயல் மேலும் அவருக்கான வாக்கு சதவீதத்தைக் குறைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எண்ணினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்தச் சம்பவம் குறித்து ராஜபக்சே தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“தேர்தல் பிரசார மேடையை நோக்கி நான் வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர் எனது கை விரலைப் பிடித்து இழுத்தார். எனக்கு வலித்தது. கொஞ்சம் விட்டிருந்தால், அவர் எனது விரலைத் துண்டாக முறித்திருப்பார். அதனால்தான், ஆத்திரப்பட்டு அவரைத் தள்ளினேன்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.