Home நாடு ஜோ லோவின் கூட்டாளிகள் இருவரை பேங்க் நெகாரா தேடுகிறது!

ஜோ லோவின் கூட்டாளிகள் இருவரை பேங்க் நெகாரா தேடுகிறது!

545
0
SHARE
Ad

wanted_20150724_amendedகோலாலம்பூர், ஜூலை 24 – 1எம்டிபி விவகாரத்தில் இரண்டு நபர்களை விசாரணை செய்ய பேங்க் நெகாரா மலேசியா வங்கி தேடி வருகின்றது.

கேசி டாங் கெங் சி (வயது 50) மற்றும் ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான் (வயது 42) என்ற இரண்டு நபர்களின் புகைப்படங்களை பேங்க் நெகாரா தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றது.

அவர்கள் இருவரும் செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் 1953-ன் கீழ் விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice