Home கலை உலகம் 53 வயது டாம் குரூஸ் 22 வயது உதவியாளரை மணக்க இருப்பதாகத் தகவல்!

53 வயது டாம் குரூஸ் 22 வயது உதவியாளரை மணக்க இருப்பதாகத் தகவல்!

592
0
SHARE
Ad

Tom Cruise on set of upcoming film 'Mena' in Georgiaகோலாலம்பூர், ஜூலை 26 – ‘மிஷன் இம்பாஸிபில்’, ‘வார்ஸ் ஆப் தி வேர்ல்ட்’, ‘டாப் கன்’ போன்ற அதிரடிப் படங்கள் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று இருக்கும் ஹாலிவுட் நாயகன் டாம் குரூஸ், நான்காவது முறையாகத் திருமணம் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் திருமணம் செய்யப்போவது வேறுயாரையும் அல்ல, கடந்த ஒரு வருடமாக இவரிடம் உதவியாளராக பணிபுரியும் எமிலி தாமஸைத் தான்.

53-வயதான குரூஸிற்கு, 22-வயதான எமிலியின் மீது காதல் வந்தது தனிக்கதையென ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குரூஸ், தனது மூன்றாவது மனைவியான கேட்டி ஹோம்ஸை அதிகாரப்பூர்வமாக பிரிந்தாலும், அவரை மறக்க முடியாமல் இருந்த தருணத்தில், கேட்டியின் சாயலில் இருக்கும் எமிலி, குரூஸிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார். காலப்போக்கில், எமிலியை பிரிந்து டாம் குரூஸால் இருக்க முடியவில்லை. அவர் அருகில் இருக்கும் போது டாம் மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கேட்டிக்கு முன்பாக குரூஸ், மிமி ரோஜர்ஸ் மற்றும் நிகோல் கிட்மேனை திருமணம் செய்து பின்னர் அவர்களுடனான வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பினால் விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம், மிஷன் இம்பாஸிபில் புதிய பாகத்தின் வெளியீட்டு வேலைகளில் டாம் குரூஸ், முனைப்பாக இருப்பதால், அடுத்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், டாமின் செய்தித்தொடர்பாளர் இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார்.