Home வணிகம்/தொழில் நுட்பம் ‘த எக்னாமிஸ்ட்டின்’ பங்குகளையும் விற்கிறது பியர்சன் – ஃபினான்ஸியல் டைம்ஸ்!

‘த எக்னாமிஸ்ட்டின்’ பங்குகளையும் விற்கிறது பியர்சன் – ஃபினான்ஸியல் டைம்ஸ்!

488
0
SHARE
Ad

economistகோலாலம்பூர், ஜூலை 26 – ‘பியர்சன்’ (Pearson) பதிப்பகக் குழுமம் ‘ஃபினான்ஸியல் டைம்ஸ்’ (Financial Times) செய்தி நிறுவனத்தை, ஜப்பானைச் சேர்ந்த புகழ் பெற்ற ஊடகமான ‘நிக்கேய்’ (Nikkei) -க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், பியர்சன், ‘த எக்னாமிஸ்ட்’ (The Economist) இதழின் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய இருப்பதாக ஃபினான்ஸியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1957-ம் ஆண்டும், பியர்சன் குழுமம், த எக்னாமிஸ்ட் குழுமத்திடமிருந்து 50 சதவீத பங்குகளை பெற்று இருந்தது. கடந்த சனிக்கிழமை, ஃபினான்ஸியல் டைம்ஸ் செய்தி நிறுவனம், நிக்கேய் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது த எக்னாமிஸ்ட்டின் பங்குகள் விற்பனை செய்யப்ப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை பியர்சன் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

த எக்னாமிஸ்ட் குழுமத்தில் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்களே, பியர்சனின் பங்குகளையும் வாங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கல்வி தொடர்பான வர்த்தகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், செய்தி நிறுவனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பியர்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

த எக்னாமிஸ்ட் குழுமத்தில் பியர்சன் நிறுவன பங்குகளின் மதிப்பு 620 மில்லின் டாலர்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.