Home வணிகம்/தொழில் நுட்பம் ஃபினான்ஸியல் டைம்ஸைக் கைப்பற்றுகிறது நிக்கேய்!

ஃபினான்ஸியல் டைம்ஸைக் கைப்பற்றுகிறது நிக்கேய்!

542
0
SHARE
Ad

FTலண்டன், ஜூலை 23 – ‘பியர்சன்’ (Pearson) பதிப்பகக் குழுமம் ‘ஃபினான்ஸியல் டைம்ஸ்’ (Financial Times) செய்தி நிறுவனத்தை, ஜப்பானைச் சேர்ந்த புகழ் பெற்ற ஊடகமான ‘நிக்கேய்’ (Nikkei) -க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, விற்பனைத் தொகையாக 1.30 பில்லியன் டாலர்கள், உறுதி செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபினான்ஸியல் டைம்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற உலகின் பல்வேறு முன்னணி ஊடக நிறுவனங்கள் பெரும் முயற்சி எடுத்தன. ஆரம்பக்கட்டத்தில், ஜெர்மன் நிறுவனமான ‘ஆக்ஸெல் ஸ்ப்ரிங்கர்’ (Axel Springer) ஃபினான்ஸியல் டைம்ஸைக் கைப்பற்றிவிடும் என்றே கூறப்பட்டது. ஆனால், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் நிக்கேய் முன்னிலை பெற்றது.

இது தொடர்பாக பியர்சன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஃபல்லான் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளாக, ஃபினான்ஸியல் டைம்ஸின் பெருமை மிகு உரிமையாளராக பியர்சன் இருந்து வந்தது. எனினும், சமீபத்தில் திறன்பேசிகளாலும், சமூக ஊடகங்களாலும் ஏற்பட்ட மாறுதல், இத்துறையில் எங்களுக்கு சரிவை ஏற்படுத்தியது. இந்த புதிய சூழலில், ஃபினான்ஸியல் டைம்ஸ் வெற்றிகரமாக இயங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டியது அவசியம். அதற்கு இதுவே சரியான தருணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.