Home வாழ் நலம் கண்களைக் காக்கும் காவலன்

கண்களைக் காக்கும் காவலன்

650
0
SHARE
Ad

carrots-eyesகோலாலம்பூர், மார்ச்9 – பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.  இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவில் கீரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளைக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை  அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

#TamilSchoolmychoice

வைட்டமின் ஏ யில் கண்ணையும், மூளையையும்  இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ‘ரோடோஸ்பின்’ என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து  பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கேரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. கறிவேப்பிலை மற்றும் கேரட்  கண்களைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இரண்டும் கண்களின் காவலனாக விளங்குகின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை,  உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.