மெக்சிகோ, ஜூலை 31-அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற கிறிஸ்துவர்களின் மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம்(லாரி) புகுந்ததில் 27 பேர் உடல் நசுங்கிச் செத்தனர்; பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்; 150 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோ மஸாப்பில் நகரில் உள்ள சான் கிரகோரியோ மாக்னோ தேவாலயம் நோக்கிப் பக்தர்கள் ஸ்தோத்திரங்கள் முழங்கியபடி,சாலை ஓரத்தில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாகக் கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த மிக நீளமான லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலருக்கு உடல் உறுப்புகள் பலத்த சேதமடைந்தன. படுகாயத்துடன் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.