Home கலை உலகம் ஆங்கிலம், சீன மொழிகளில் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது பாகுபலி!

ஆங்கிலம், சீன மொழிகளில் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது பாகுபலி!

646
0
SHARE
Ad

anu-600x3001-600x300சென்னை, ஜூலை 31-பாகுபலி படத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடவிருக்கிறார்கள்.

பாகுபலி திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாகவும், இந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் உலக சாதனைப் படைத்து வருகிறது.

எனவே, இந்தப் படத்தின் உலகளாவிய வரவேற்பையும் வெற்றியையும் கண்டு, அடுத்து, சீன மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் பாகுபலித் தமிழ்ப்படம் வெளியாகியிருந்தாலும், சீனர்கள் அதிகம் வசிக்கும் அந்நாட்டில் பாகுபலி சீன மொழிமாற்றுப் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு மொழிமாற்றம் செய்யும் போது, படம் சர்வதேசத் தரத்தில் இருக்கும்படி எடிட்டிங்கில் மேலும் மெருகூட்டி வெளியிடப் போவதாக இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

.