Home நாடு கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் போயிங் 777 வகை தான் – போக்குவரத்து அமைச்சு உறுதி

கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் போயிங் 777 வகை தான் – போக்குவரத்து அமைச்சு உறுதி

629
0
SHARE
Ad

ad_176669435கோலாலம்பூர், ஜூலை 31 – ‘மாயமான எம்எச்370 -ஐ விசாரணை அதிகாரிகள் தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று மலேசியப் போக்குவரத்து துணையமைச்சர் அப்துல் அஜிஸ் கப்ராவி இன்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள், இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கிய எம்எச்370 விமானத்தினுடையது தான் என்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட விமான இறக்கையின் ஒருபகுதியில் பதிக்கப்பட்டிருந்த குறியீட்டு எண் போயிங் 777 இரக விமானத்தின் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அந்த பாகத்தின் குறியீட்டு எண்ணை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனமும் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக அப்துல் அஜிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice