Home உலகம் இலங்கையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் பலி; பலர் படுகாயம்!

இலங்கையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் பலி; பலர் படுகாயம்!

630
0
SHARE
Ad

paகொழும்பு, ஜூலை 31-இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்; 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆகஸ்டு 17–ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இலங்கை முழுக்கச் சூடுபிடித்துள்ளது.

225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத் தேர்தல் என்பதால், தொகுதியெங்கும் பிரச்சாரக் கூட்டங்கள் களைகட்டியுள்ளன. எங்கும் ஒரே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

#TamilSchoolmychoice

இன்று கொழும்புவின் புறநகர்ப் பகுதியான கோட்டஹேனாவில் நிதியமைச்சர் ரவி கருணநாயகே கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் முடிந்து மக்கள் கலையத் தொடங்கிய போது, இரண்டு வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கூட்டத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிகளால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த அதிரடித் தாக்குதலில் ஒரு பெண் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்துபோனார். மரண ஓலத்தோடு மக்கள் சிதறி ஓடினர். பலர் குண்டடிபட்டுப் படுகாயமடைந்தனர்.

முன்னாள் அதிபர் ராஜபக்சேவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் நிதியமைச்சர் ரவி கருணநாயகே. அதனால், அவருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் அவர் பங்கு கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

.