கொழும்பு – இலங்கையில் புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையைத் தேர்வு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறி நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முக்கிய அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சுமூகமான முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
நாடாளுமன்றத்தெர்தலில்பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்புத் துறை, நிதித்துறை, நீதித்துறை மற்றும் வெளிவிவகாரத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களைத் தமக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
பொருளாதார அபிவிருத்தித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சுக்களைத் தமக்கு வழங்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சி கேட்டது.
ஒருவழியாய் நேற்று இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது.
பதன்படி,தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.