Home கலை உலகம் ‘கோலங்கள்’ தொடர் இயக்குநர் திருச்செல்வம் சாலை விபத்தில் காயம்!

‘கோலங்கள்’ தொடர் இயக்குநர் திருச்செல்வம் சாலை விபத்தில் காயம்!

750
0
SHARE
Ad

photoபெரம்பலூர்- பிரபல தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திருச்செல்வம் கார் விபத்தில் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சித் தொடரில் நடிகராகப் பிரபலமாகிப் பின்னர் தேவயானி நடித்த ‘கோலங்கள்’ தொடர் மூலம் இயக்குநராக உயர்ந்து புகழ் பெற்றவர் திருச்செல்வம்.

அவர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடந்த உறவினருடைய காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, சென்னை நோக்கிக் காரில் சென்று கொண்டிருக்கும் போது பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.

#TamilSchoolmychoice

இதில் திருச்செல்வமும் காரை ஓட்டி வந்த அவரது உதவியாளரும் தெய்வாதீனமாக இலேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இவ்விபத்தில் அவரது காரின் முன் பகுதி நொறுங்கிப் பலத்த சேதமடைந்தது. சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணனும் இதே பகுதியில்தான் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.