Home Featured நாடு பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!

பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!

786
0
SHARE
Ad

RAMASAMYகோலாலம்பூர் – இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள இந்தியர்கள் திரளாகக் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி (படம்) தலைமையிலான அணியினர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியிலிருந்து பிற்பகல் 2.00 மணிக்கு அணிவகுத்துப் புறப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

KLANGஇதற்கிடையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் (படம்) தலைமையில் இந்திய அணியினர் தலைநகர் புடு பிள்ளையார் ஆலயத்தில் திரண்டு, அங்கிருந்து நண்பகல் 12.00 மணிக்கு அணிவகுத்து வருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கிள்ளானிலிருந்து வரும் இரயில்களில் மஞ்சள் மயம்

இதற்கிடையில் பெர்சே பேரணியில் கலந்து கொள்ள கிள்ளானில் இருந்து வந்து கொண்டிருக்கும் ‘செல்லியல்’ வாசகர் ஒருவர், கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் இரயில் நிறைய மஞ்சள் ஆடை அணிந்தவர்கள் காணப்படுகின்றார்கள் என்றும், இரயில் முழுக்க மஞ்சள் மயமாகக் காட்சியளிக்கின்றது என்றும் நமக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.