Home Featured நாடு மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!

மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!

648
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 –  நாட்டைக் கலக்கி வரும் 1எம்டிபி, மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகளைத் தவிர்த்து மற்றொரு பிரபலமும் தனது கருத்துக்களால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார். நட்பு ஊடகங்களிலும் இணையத்தள வாசகர்களிடத்திலும் அவரது கருத்துக்கள் வரவேற்பைப் பெறுகின்றன. மதிக்கப்படுகின்றன!

அவர் வேறு யாருமல்ல!

Datuk-Seri-Nazir-Razak1-565x398பிரதமர் நஜிப்பின் தம்பியும், முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் கடைசிப் புதல்வருமான நசீர் ரசாக்தான் (படம்) அவர். வங்கித் துறையில் தனி முத்திரை பதித்து, நாட்டின் முன்னணி வங்கியாளராகவும், சிஐஎம்பி வங்கியின் தலைவராகவும் செயல்பட்டு வரும் நசீர் ரசாக் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் பதவியில் இருந்து நீக்கப்படும் முன்னர் அவருடன் சேர்ந்து இரவு உணவருந்தியுள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப். இது தொடர்பான புகைப்படத்தை பிரபல வங்கியாளர் டத்தோஸ்ரீ நசீர் ரசாக் தனது ‘இண்ஸ்டாகிராம்’ வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “தனது முன்னாள் துணைப் பிரதமருடன், பிரதமர் நஜிப் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட கடைசி இரவு உணவு (last supper)” என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘லாஸ்ட் சப்பர்’ என்பது இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் கலந்து கொண்ட இரவு உணவாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த நிறைய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் ஒரு மனிதரை வீழ்த்துவதற்கு முன்னால் அவருடன் அமர்ந்து உண்ணும் இரவு உணவுக்கு “லாஸ்ட் சப்பர்” என்று பெயர் குறிப்பிடுவார்கள்.

Muhyiddin-najib-Nazir Razak-last supper கடந்த 28ஆம் தேதி மொகிதின் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருநாள் முன்பு (ஜூலை 27) நசிர் ரசாக் வீட்டில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் அவரும், பிரதமர் நஜிப்பும் கலந்து கொண்டனர்.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் நஜிப்பும், மொகிதினும் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். மேலும் பிரதமரின் இளைய சகோதரரான நசிருடன் இருவரும் புன்னகைத்தபடியே பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.

“மொகிதின் விலக்கப்படுவதற்கு முன்னால் இருவரும் கடைசியாக இணைந்து உணவருந்திய தருணம் இது என வரலாற்றுப் பக்கங்களில் இந்நிகழ்வு இடம்பெறும்,” என சிஐஎம்பி குழுமத்தின் தலைவரான நசிர் ரசாக் தெரிவித்துள்ளார்.