Home கலை உலகம் ‘புலி’ படப் பாடல் வெளியீட்டில் விஜய் ருசிகரப் பேச்சு!

‘புலி’ படப் பாடல் வெளியீட்டில் விஜய் ருசிகரப் பேச்சு!

596
0
SHARE
Ad

IMG_6795_2496563fசென்னை, ஆகஸ்டு 3- புலி படத்தின் பாடல் வெளியீடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. புலி படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வெளியிட, அதை விஜய்யின் மனைவி சங்கீதா பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் ஒரு சுவாரஸ்யம் நடந்தது. எப்போதும் அதிகம் பேசாத நடிகர் விஜய், இவ்விழாவில் நிறைய நேரம் பேசினார். அதுவும் அந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரையும் அதிகமாகப் புகழ்ந்து பேசினார்.

“இந்தப்படத்தில் என்னோடு இரண்டு பெண் புலிகளும் நடித்திருக்கிறார்கள். ஒன்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிருபித்துக் கொண்டிருக்கும் உலகநாயகன் கமல் சாரின் மகள் ஸ்ருதிஹாசன். இன்னொன்று, மும்பை நமக்கு வழங்கிய இன்னொரு குஷ்பு ஹன்சிகா.

#TamilSchoolmychoice

அதேபோல், இந்தப்படத்தில் மேலும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; ஒருத்தர், கிராபிக்ஸ் செய்த கமலக்கண்ணன்; இன்னொருத்தர், எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்.

சினிமாவில் ஹீரோக்களுக்கு எப்போதுமே நம்பர் 1, நம்பர் 2 என ஏற்றங்கள் இறக்கங்கள் வரும். ஆனால், சினிமாவில் எப்போதுமே நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் கவிஞர் வைரமுத்துதான்” என்று புகழ்ந்தார்.

மேலும்,ஸ்ரீதேவியைச் ‘சிவகாசி மத்தாப்பூ’ ஸ்ரீதேவி என்று புகழ்ந்தார்.

“சதுரங்கவேட்டையாடிய ஒளிப்பதிவாளர் நட்டி, இந்தப்படத்தில் ஒளிப்பதிவில் புலிவேட்டையாடியிருக்கிறார்” என்று புகழ்ந்தார்.

இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் உட்பட எல்லோரையும் தனித்தனியாகச் சொல்லி அவர் புகழ்ந்து பேசியது சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் அவர்,”அடுத்த நிமிஷம் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துத்தான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்கத் தெரியாது என்று பேசியதோடு, சில குட்டிக் கதைகளையும் சொல்லி ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தார்.

மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் போல் ருசிகரமாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார்.