Home இந்தியா மேகி நூடுல்ஸ்க்குத் தடை நீங்குமா? நீடிக்குமா?-இன்று தீர்ப்பு!

மேகி நூடுல்ஸ்க்குத் தடை நீங்குமா? நீடிக்குமா?-இன்று தீர்ப்பு!

542
0
SHARE
Ad

magiமும்பை, ஆகஸ்டு 3-மேகி நூடுல்ஸில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் கலக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையூட்டு வழக்குத் தொடர்ந்தது.

மேகி நூடுல்ஸில் உணவுப் பாதுகாப்புத் தர நிண்ய ஆனையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவு காரீயம் மட்டுமே அதில் கலக்கப்படுள்ளது எனவும், உணவுப் பாதுகாப்பு அமைப்புகளும் அரசு அமைப்புகளும் நடத்திய சோதனை முடிவுகள் தவறானவை என்றும், இந்தியாவில் ஆய்வு செய்ய சரியான ஆய்வுக் கூட வசதிகளே இல்லை எனவும்  நெஸ்லே தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடந்து இவ்வழக்கின் தீர்ப்பை ஆகஸ்டு 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், மேகி நூடுல்ஸ்க்கான தடை விலகுமா? நீடிக்குமா என்பது குறித்து இன்று மாலை தெரிய வரும்.

.