Home இந்தியா வேலையின்றித் தவிக்கும் மேகித் தொழிலாளர்கள்: மீண்டும் ஆலை திறக்க முயற்சி!

வேலையின்றித் தவிக்கும் மேகித் தொழிலாளர்கள்: மீண்டும் ஆலை திறக்க முயற்சி!

812
0
SHARE
Ad

magiபுதுடெல்லி – மேகி நூடுல்சிற்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்கப்பட்டதால், மேகித் தயாரிப்பு ஆலையில் வேலை செய்த  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி, அன்னாடங் காய்ச்சிகளாக அல்லாடி வருகின்றனர்.

தடை விதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிட வேலைக்குப் போவது, டீ விற்பது, கை ரிக்‌ஷா இழுப்பது என்று எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் குடும்பம் நடத்தும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பலர் பிழைப்புத் தேடி ஊரை விட்டே போய்விட்டனர்.சிலர் அதற்கும் வழியில்லாமல் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தடையை விலக்கி, தாங்கள் இழந்த சந்தை மதிப்பை மீண்டும் பெற நெஸ்லே நிறுவனம் பல வகைகளிலும் போராடி வருகிறது.

மும்பை உயர்நீதிமன்றம்  தடையை விலக்கியிருப்பதை அடுத்து மேகி நூடுல்சை இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மேகி நூடுல்ஸ்களுக்கான மாதிரிகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பஞ்சாப், ஐதராபாத், ஜெய்ப்பூர் ஆய்வகங்களுக்கு அனுப்பிப் பரிசோதனை செய்து நற்சான்றிதழ் பெற்றவுடன் மேகி உற்பத்தி துவங்கப்படும் என நெஸ்லே  இயக்குநர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேகி நிறுவனம் செயல்படத் தொடங்கினால் மட்டுமே மேகித் தொழிலாளர்களுக்கு விடிவுகாலம்!