Home இந்தியா ரூ640 கோடி இழப்பீடு: நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் வழக்குக் கடிதம்!

ரூ640 கோடி இழப்பீடு: நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் வழக்குக் கடிதம்!

1045
0
SHARE
Ad

05-1433490671-maggi354-600புதுடில்லி. ஆகஸ்ட் 17-மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ரூ.640 கோடி இழப்பீடு கோரி நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நெஸ்லே நிறுவனத்துக்குத் தேசிய நுகர்வோர் நல ஆணையம் கடிதம்  அனுப்பியுள்ளது.

மேகி நூடுல்ஸ் விசயத்தில் நெஸ்லே நிறுவனம் வணிக நெறிமுறைகளைத் தவறான வழிகளில் பின்பற்றியதாகவும், நூடுல்ஸ் விற்பனையில் மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்ததாகவும், பொய்யான விளம்பரங்கள் மூலம் மக்களைக் குழப்பியதாகவும் குற்றம் சாட்டி 640 கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டு மத்திய அரசு வழக்குத் தொடுத்தது.

நுகர்வோர் ஆணையத்தில் இழப்பீடு கேட்டு மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த  தேசிய நுகர்வோர் நீதிமன்றம், நெஸ்லே நிறுவனத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு வழக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

.