ஆக்ரா,ஆகஸ்ட் 17- ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு டுவிட்டரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள உலகின் முதலாவது நினைவுச் சின்னம் என்ற பெருமையைத் தாஜ் மஹால் பெறுகிறது.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சுதந்திர தினத்தன்று இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தார்.
மேலும், ‘என் தாஜ்மகாலின் நினைவு’ என்னும் பெயரில் தனது குடும்பத்துடன் தாஜ்மஹால் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அதில் பதிவு செய்தார்.
கணக்கு தொடங்கப்பட்ட ஒரு நாளிலேயே எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தாஜ்மஹாலைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
மேலும், தாங்கள் தாஜ்மஹால் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் மக்கள் இந்தப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உலக மக்கள்அனைவரையும் கவரும் அழகான- அற்புதமான பளிங்குக் கட்டிடம் தாஜ்மகால். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.
முகலாய மன்னன் ஷாஜகான், தனது காதல் மனைவிக்காகக் கட்டிய ஓர் அழகான நினைவுச் சின்னம் தான் இது.
இதன் பிறகுதான் பல தலைவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பும் வழக்கம் இந்தியாவில் வந்தது.