Home கலை உலகம் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்: ஜெயலலிதாவையும் சந்திப்பார்!

ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்: ஜெயலலிதாவையும் சந்திப்பார்!

579
0
SHARE
Ad

17-1439804043-vishal-met-rajiniசென்னை, ஆகஸ்ட் 17- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ரஜினிகாந்தைச் சந்தித்து விஷால் அணியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

விஷால், நாசர், கார்த்தி,பொன்வண்ணன் ஆகியோர் இன்று பிற்பகல் போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

ரஜினிகாந்தும் அவருக்கே உரிய பாணியில் ஆகட்டும் பார்க்கலாம் எனச் சிரித்தபடி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ரஜினிகாந்த் சாரைச் சந்தித்தது போல், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

அதுபோல் மூத்த உறுப்பினர் என்ற முறையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வருமாறு முதல்வர் ஜெயலலிதாவையும் அழைப்போம். இது சம்பந்தமாக முதல்வரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம்.

அவரது அனுமதி கிடைத்தவுடன் அவரைச் சென்று சந்திப்போம். கண்டிப்பாக  அவர் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பார் என எதிர்பார்க்கிறோம்.முதல்வர் வாக்களித்தால் அதைவிட மிகுந்த மகிழ்ச்சி எதுவும் எங்களுக்கு இல்லை” என்று கூறினார்.

மேலும், இது தொடர்பாக நடிகர் நாசர் கூறியதாவது:

“நடிகர் சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்” என்றார்.

மேலும், தங்கள் அணிக்கு ‘பஞ்சபாண்டவர் அணி’ எனப் பெயர் சூட்டியுள்ளதாகவும் நாசர் தெரிவித்தார்.