Home Featured இந்தியா டெல்லி ஆக்ராவில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு!

டெல்லி ஆக்ராவில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு!

886
0
SHARE
Ad

tajmahal-agraஆக்ரா – சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமான டெல்லி ஆக்ராவில் இன்று சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடித்தது.

ஆக்ரா கெந்தோன்மெண்ட் இரயில் நிலையத்தில் ஒரு வெடிகுண்டும், இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் அருகில் ஒரு குண்டும் வெடித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

#TamilSchoolmychoice

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில தினங்களுக்கு முன் டெல்லி காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.